Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2025 மார்ச் 11 , பி.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆரோக்கியமான மாணவர்களை உருவாக்கும் நோக்கில் சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த "சப்ரகமுவ மாகாண பாடசாலை சுகாதார மேம்பாட்டுத் திட்டத்தின்" ஆரம்ப நிகழ்வு செவ்வாய்க்கிழமை (11) அன்று சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன தலைமையில் சப்ரகமுவ மாகாண சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
சுகாதார மேம்பாட்டுக் கொள்கைகளுக்கு ஏற்றவாறு தயாரிக்குமாறு அரசாங்க பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதற்கமைய, அதற்கேற்ப பாடசாலை முறையின் பௌதீக சூழல், மாணவர்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் சமூக நல்வாழ்வு என்பனவும் இதில் உள்ளாக்கப்பட்டுள்ளன.
மேலும் மாணவர்களுக்கான ஊட்டச்சத்து , ஆரோக்கியமான உணவு, உடல் செயல்பாடு மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறைகள், மனநலம் மற்றும் நல்வாழ்வு, புகையிலை, மது மற்றும் போதைப்பொருள் இல்லாத சூழல், பாதுகாப்பான சூழல், சுகாதாரம் மற்றும் தொற்று நோய் தடுப்பு, போக்குவரத்து , சுகாதாரம் மற்றும் கல்வி மற்றும் திறன் மேம்பாடு, சமூகம் மற்றும் பெற்றோர் பங்கேற்பு, வாழ்க்கைத் திறன் மேம்பாடு, நோய் மற்றும் காயம், அபாயத்தை குறைத்தல் என்பனவும் இத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண பிரதம செயலாளர் ஈ.கே.ஏ.சுனிதா, சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சாமர பாமுனு ஆராச்சி, மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர, மாகாண கல்விப் பணிப்பாளர் தர்ஷனி இத்தமல்கொட, மாகாண கல்வி அமைச்சின் திட்டமிடல் பிரிவுப் பணிப்பாளர் நெவில் குமாரகே, சப்ரகமுவ மாகாண பிரதி கல்வி பணிப்பாளர் நிஹால் வசந்த மற்றும் வைத்தியர்கள், அதிபர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
சிவா ஸ்ரீதரராவ்
13 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
2 hours ago