Janu / 2025 பெப்ரவரி 26 , மு.ப. 09:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெமோதரை ,எல்ல பகுதியில் உள்ள 9 வளைவு பாலத்தை பார்வையிட்டுக் கொண்டிருந்த ஐஸ்லாந்து நாட்டைச் சேர்ந்த இரு சுற்றுலாப் பயணிகள் குளவிக் கொட்டுக்கு இலக்காகி தெமோதரை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (25) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. குளவி கொட்டுக்கு இலக்கான 23 வயதுடைய இளைஞன் மற்றும் யுவதியின் உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .