Editorial / 2019 டிசெம்பர் 19 , பி.ப. 02:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீலமேகம் பிரசாந்த்
நுவரெலியா பிரதேச சபைக்குக்குட்பட்ட சென்கூம்ஸ் தோட்டத்தில், தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் வேலை செய்யும் இளைஞர்களுக்கு, சுவரோவியம் வரைவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லையென, இளைஞர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஜனாதிபதியின் விசேட வேலைத்திட்டத்தின் கீழ், சுவரொட்டியில்லா வண்ணமயமான சூழலை உருவாக்க, நாடு முழுவதும் சுவர்களில் தன்னார்வ இளைஞர்களால் ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சென்கூம்ஸ் இளைஞர்கள், குறித்த பகுதியிலுள்ள சுவர்களில் ஓவியம் வரைவதற்கான அனுமதியை, சென்கூம்ஸ் தேயிலை ஆராய்ச்சி நிலைய பணிப்பாளரிடம் கோரியபோதே, இதற்கான அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சென்கூம்ஸ் பகுதியிலுள்ள சுவர்கள் அனைத்தும், சுவரொட்டிகளை ஒட்டுவதற்காகவே பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் இந்நிலையில், இதற்கான அனுமதி தங்களுக்குக்குக் கிடைத்தால், சென்கூம்ஸ் பகுதியை அழகிய பகுதியாக மாற்ற முடியும் என்று இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
19 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
35 minute ago