Kogilavani / 2016 ஒக்டோபர் 03 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
மஸ்கெலியா கிளங்கள் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வெளியேறிய, மாணிக்கம் மகாலிங்கம் என்பவரை, கடந்த சனிக்கிழமை (1) முதல் காணவில்லையென, உறவினர்கள் மஸ்கெலியா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
மஸ்கெலியா காட்மோர் தம்பதனையைச் சேர்ந்த 63 வயதுடைய நபரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
இவர் உடல்நலக் குறைப்பாடு காரணமாக, கிளங்கன் வைத்தியசாலையில் சிகிக்சைபெற்று வந்துள்ளதுடன் சிகிச்சையின் பின், கடந்த சனிக்கிழமை (1) வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார்.
எனினும், இவர் இதுவரை வீடு வந்துசேரவில்லை என அவரது மகனான தினேஸ் என்பவர், மஸ்கெலியா பொலிஸில், ஞாயிற்றுக்கிழமை (2) முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
5 minute ago
44 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
44 minute ago
56 minute ago
1 hours ago