2026 ஏப்ரல் 11, சனிக்கிழமை

சிறுநீரகங்களை விரும்பியே விற்கின்றனர்

Kogilavani   / 2016 பெப்ரவரி 15 , மு.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதர்ஷினி சாமிவேல்

மலையகத்தில் பெரும்பாலானவர்கள், விரும்பியே தமது சிறுநீரகங்களை விற்பனை செய்ய முன்வருகின்றனர். தமது சொந்த  தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளும் நோக்கிலேயே இவ்வாறான நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடுகின்றனர் என மத்திய மாகாண கல்வியமைச்சர் எம்.ரமேஸ் தெரிவித்தார்.

'இவ்வாறு சிறுநீரகங்களை விற்பனை செய்பவர்கள், பேசியபடி பணம் கிடைத்து விட்டால் அது குறித்து வாய் திறப்பதில்லை. ஏமாற்றப்படும் சிலரே அது குறித்து முறைப்பாடு செய்கின்றனர். பணத்துக்கு ஆசைப்பட்டு சிறுநீரகங்களை விற்பனை செய்வதால், ஏற்படும் பின்விளைவுகளை எமது சமுகத்தினர் சிந்திப்பதில்லை' என்றும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .