2026 ஏப்ரல் 11, சனிக்கிழமை

சிறுமிகள் மீது துஷ்பிரயோக முயற்சி; முதியவர் கைது

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 13 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு. இராமசந்திரன்

நோட்டன், ஒஸ்போன் பிரதேசத்தில் 6 வயதுடைய சிறுமிகள் இருவரை, துஷ்பிரயோகத்துக்குட்படுத்த முயற்சித்த முதியவரொருவரை, நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார், நேற்று வெள்ளிக்கிழமை (12) கைதுசெய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

நேற்று (12) மாலை பாடசாலை விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த 6 வயதுடைய இரண்டு சிறுமிகளை, 65 வயதுடைய முதியவரொருவர் சொக்லேட் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகளை கூறி, தனது வீட்டுக்கு அழைத்துச்சென்றுள்ளார்.

அச்சந்தர்ப்;பத்தில் மேற்குறிப்பிட்ட நபரின் வீட்டுக்கு பாடசாலைச் சிறுமிகள் செல்வதை அவதானித்த அயலவர்கள், உடனடியாகச் சென்று பார்த்து சிறுமிகளை மீட்டதுடன், பொலிஸாருக்கும் இதுதாடர்பாக அறிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு வருகைதந்த பொலிஸார், சிறுமிகளின் பெற்றோர்களிடமிருந்து முறைப்பாட்டைப் பெற்று சந்தேகநபரைக் கைதுசெய்து, மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .