2026 ஏப்ரல் 11, சனிக்கிழமை

சிறுமியை அபகரிக்க முயற்சி; வயோதிபப் பெண் காயம்

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 16 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு. இராமசந்திரன்

ஹட்டன் தனியார் பஸ் தரிப்பிடத்தில் தனது பேத்தியுடன் நின்றுகொண்டிருந்த வயோதிபப் பெண், மற்றுமொரு பெண்ணின் தாக்குதலில் காயமடைந்துள்ளார்.

ஹட்டனிலிருந்து எபோட்ஷிலி செல்வதற்காக, 60 வயது மதிக்கத்தக்க வயோதிபப் பெண், ஹட்டன் தனியார் பஸ் தரிப்பிடத்தில் தனது 4 வயதுடைய பேத்தியுடன் நின்றுகொண்டிருந்த வேளை, சிறுமியை அபகரிப்பதற்காக பெண்ணொருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். 

இன்று செவ்வாய்க்கிழமை (16) 2.30க்கு இடம்பெற்ற இச்சம்பவத்தில் காயமடைந்த வயோதிபப் பெண், டிக்கோய இலங்கன் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இத்தாக்குதலை மேற்கொண்ட பெண், மனநிலை பாதிக்கப்பட்டவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .