Sudharshini / 2015 ஓகஸ்ட் 31 , மு.ப. 06:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொரிஸ் என்டனி
சிறையிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட தனது மகன் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என உயிரிழந்தவரின் தாயார், குருவிட்ட பொலிஸ் நிலையத்தில் சனிக்கிழமை (29) முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
போதைப்பொருள்; வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த 26ஆம் திகதி கைது செய்யப்பட்டு, இரத்தினபுரி நீதவான் நீதிமன்ற நீதவானின் உத்தரவுக்கமைய குருவிட்ட சிறையில் வைக்கப்பட்ட பெல்மதுளை, லெல்லுப்பிட்டிய, பெரண்டுவ தோட்டத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான எஸ்.சதீஸ் (வயது 22) என்பவர், கடந்த 27ஆம் திகதி வியாழக்கிழமை, சிறைக்கூடத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
குறித்த நபர் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என குருவிட்ட பொலிஸார் தெரிவித்த போதும், தனது மகன் தாக்குதலுக்குள்ளாகியே உயிழந்துள்ளார் என உயிரிழந்த நபரின் தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில், அவரது மரணம் குறித்து குருவிட்ட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
54 minute ago
2 hours ago
01 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
2 hours ago
01 May 2026