2025 ஜூலை 14, திங்கட்கிழமை

சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Sudharshini   / 2015 டிசெம்பர் 05 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்

பொகவந்தலாவை, கெம்பியன் நகரில்  சிறுவர் துஷ்பிரயோகங்களை கண்டித்தும் மக்களுக்கு தெளிவூட்டும் வகையிலும் ஆர்பாட்டம் ஒன்று  இன்று (05) முன்னெடுக்கப்பட்டது.

இதில் 150க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கலந்துக்கொண்டு பொகவந்தலாவை கெம்பியன் தோட்ட வைத்தியசாலையில் இருந்து கெம்பியன் நகர்வரை பாதாதைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர்.

இதன்போது, 'மலையகத்தில் சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்படக் கூடாது, சிறுவர் மீது துஷ்பிரயோகங்களை மேற்கொள்வோருக்கு எதிராக தண்டனை வழங்க வேண்டும்' என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிறுவர்கள் கோஷம் எழுப்பினர்.

இதேவேளை, நாடாளுமன்றத்தில்  அரசியல் வாதிகள் மௌனம் காக்காமல் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக கடுமையான சட்டங்களை கொண்டுவர  அழுத்தம் கொடுக்க வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

கெம்பியன் தோட்ட வைத்தியசாலையில்  சிறுவர்கள் எதிர் நோக்கும் துஷ்பிரயோகங்கள் குறித்து  தெளிவூட்டும் செயலமர்வு ஒன்று பொகவந்தலாவை  பொலிஸாரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .