2026 மே 14, வியாழக்கிழமை

‘ஜனாதிபதித் தேர்தலில் நுவரெலியா பக்கம் பார்வை திரும்பியது’

Editorial   / 2019 டிசெம்பர் 02 , பி.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ சண்முகநாதன்

நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், வடக்கு, கிழக்குக்கு அடுத்ததாக, நுவரெலியா மாவட்டத்தை, இந்த ​நாட்டு மக்கள் திரும்பிப் பார்க்கும் நிலை ஏற்பட்டது என, தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாணசபை முன்னாள் உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.  

தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர் அமரர் வீ.கே வெள்ளையனின் 48ஆவது சிரார்த்த தின நினைவுப் பேருரையில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், ஜனாதிபதித் தேர்தலில், வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தோல்வி கண்டாலும், எமது தலைவர் திகாம்பரம் தோல்வி காணவில்லை என்றும் தாம் எதிர்பார்த்தவர் ஜனாதிபதியாக வரவில்லை என்றாலும், தங்களது தலைவரின் வேண்டுகோளை ஏற்று, ஒரு இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை, நுவரெலியா மாவட்ட மக்கள் வழங்கியுள்ளார்கள் என்றும் கூறினார்.  

ஜனாதிபதித் தேர்தலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது போல, இன்னும் சில மாதங்களில் மற்றுமொரு மாற்றம் ஏற்படவுள்ளது என்றும் நாடாளுமன்றத் தேர்தலூடாக, புதிய பிரதமர், அமைச்சர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என்றும் எனவே, இன்றைய சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு, மக்கள் தடுமாற வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறினார்.  

குறுகிய கால அரசியலில் சிலர் வெற்றி பெற்றாலும், மலையக மக்களது மனங்களில் திகாம்பரமே தலைவராகவே இருக்கின்றார் என்பதை, இன்றைய சிரார்த்த தின நிகழ்வில் நாம் உறுதி பூண வேண்டும் என்றும், அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .