Editorial / 2025 மார்ச் 05 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்ட மக்கள் வாழும் தோட்ட பகுதிகளுக்கு கிராம உத்தியோகஸ்தர்கள் மற்றும் சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் சரியான முறையில் தோட்டங்களுக்கு விஜயம் மேற்கொண்டு கடமையாற்றுகின்றார்களா? மேலும் அவர்கள் தங்கள் கடைமைகளுக்காக எத்தனை முறை வருகை தந்துள்ளார்கள்? என்று இ.தொ.கா பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், புதன்கிழமை (05) பாராளுமன்ற அமர்வில் கேள்வியெழுப்பினார்.
கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தொடர்பான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் – 2025 - குழு நிலை விவாதத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
பெருந்தோட்ட வீடமைப்பு திட்டத்தில் தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களை மாத்திரம் வீடமைப்பு திட்டத்தில் உள்வாங்காமல் தோட்டத்தில் வேலையில்லாமல் வெளியிடங்களில் தொழில் புரிந்து குறித்த தோட்டத்தில் வசிக்கும் அனைவருக்கும் வீடுகள் வழங்கப்படவேண்டும்.
மலையகத்தில் எல்லை நிர்ணயம் செய்யும்போது பெருந்தோட்ட மக்கள் வாழும் பிரதேசங்களையும் சரியான முறையில் உள்ளடக்கப்படவேண்டும்.
தோட்டபுற வைத்தியசாலைகளை அரசாங்க வைத்தியசாலைகளாக தரம் உயர்த்தப்பட வேண்டும். அத்தோடு தோட்ட சிறுவர் பாராமரிப்பு நிலையங்களின் உட்கட்டமைப்பு வசதிகளிலும் கவனம் செலுத்தப்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
33 minute ago
37 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
37 minute ago
2 hours ago
2 hours ago