Kogilavani / 2017 ஜூன் 14 , பி.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன், கு.புஸ்பராஜ்
டயகம, மோனிங்டன் மேற்பிரிவில், பாடசாலை மாணவி ஒருவரை, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்ற குடும்பஸ்தருக்கு எதிராக, உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தி, பிரதேச மாணவர்கள், இன்றுப் பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேற்படி மாணவி, தனது சக நண்பர்களுடன் செவ்வாய்க்கிழமை காலை பாடசாலைக்கு சென்றுள்ளார். குறித்த மாணவியை வழியில் இடைமறித்த அந்நபர், மாணவியை இழுத்துச்சென்று வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்றுள்ளார்.
இதனைக் கண்ட ஏனைய மாணவிகள் கூக்குரலிடவே, சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் பாடசாலை நிர்வாகத்துக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாடசாலை நிர்வாகம் டயகம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதுடன், மாணவியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார், சந்தேகத்தின் பேரில் அதே தோட்டத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரை கைதுசெய்துள்ளதுடன், விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையிலேயே, இச்சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதேச மக்களும் மாணவர்களும், இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மோனிங்டன் தோட்டத்துக்கென பொது போக்குவரத்து இல்லாமைக் காரணமாகவே இவ்வாறான குற்றச்செயல்கள்









இடம்பெறுவதாக தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போக்குவரத்தை சீர்செய்து தருமாறும் கோரிக்கை விடுத்தனர்.
இவ்வார்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, டயகமை நகரிலுள்ள வர்த்தகர்களும் தமது வர்த்தக நிலையங்களை, ஒரு மணித்தியாலம் மூடியமை குறிப்பிடத்தக்கது.
7 minute ago
18 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
18 minute ago
19 minute ago