2026 மே 14, வியாழக்கிழமை

dd

டெங்கு நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம்

ஆ.ரமேஸ்   / 2019 டிசெம்பர் 23 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

டெங்கு நுளம்பு பரவும் சூழலில் இருந்து, மக்களை பாதுகாக்கக் கூடிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை, நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில், நுவரெலியா பிரதேச சபை முன்னெடுக்கவுள்ளது.

அந்த வகையில், நுவரெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட 13 வட்டாரப் பகுதிகளில் காணப்படும் 37 கிராமசேவகர் பிரிவில், இந்த வேலைத்திடம், இந்த வாரம் முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக, சபையின் தவிசாளர் வேலு யோகராஜ் தெரிவித்தார்.

இது தொடர்பாக சமீபத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, நுவரெலியா பிரதேச சபையின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் முறையற்ற விதத்தில் குப்பைகளைக் கொட்டுவதற்குத் தடை விதிக்கப்பட்டதுடன், மீறி கொட்டுவோருக்கு சட்ட நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், டெங்கு நுளம் பரவும் வகையில் சுற்றாடலை வைத்திருப்போருக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கவும் தீர்மானம் எடுக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .