Janu / 2025 செப்டெம்பர் 11 , மு.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனமல்வில மற்றும் லுனுகம்வெஹேர பொலிஸ் பிரிவுகளில் கடந்த காலங்களில் வீடுகளுக்குள் புகுந்து, தங்க ஆபரணங்கள் மற்றும் பணம் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் தனமல்வில பொலிஸாரால் புதன்கிழமை(10) கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் தனமல்வில, அளுத்கொட பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
திருடப்பட்ட தங்க நகைகள் வங்கிகள் மற்றும் பல்வேறு அடகு கடைகளுக்கு விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
நீதிமன்ற உத்தரவின் பேரில், பொலிஸாரால் தங்க நகைகளை கைப்பற்ற விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சந்தேக நபரை வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சுமனசிறி குணதிலக
11 minute ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
6 hours ago
7 hours ago