Mayu / 2024 டிசெம்பர் 31 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கௌசல்யா, ரஞ்சித் ராஜபக்ஷ, துவாரஷான், எஸ்.கணேசன், பி.கேதீஸ்
பூண்டுலோயா டன்சினன் கீழ் பிரிவு தோட்டத்தில் தந்தை தாக்கியதில் 25 வயதுடைய மகன் உயிரிழந்துள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் திங்கட்கிழமை (30) இரவு நிகழ்ந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: குடும்பத்தில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதால் தந்தையின் தாக்குதலுக்கு மகன் பலியாகியதாக தெரிய வருகிறது.

சம்பவத்தை அடுத்து தோட்ட மக்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, காயமடைந்த தந்தை மற்றும் 18 வயதுடைய மகனும் கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாக தெரிவிக்ப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான விசாரணையை பூண்டுலோயா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
44 minute ago
47 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
47 minute ago
52 minute ago