Kogilavani / 2021 மே 06 , பி.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேன் செனவிரத்ன
தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறி, கண்டி நகரில் சுற்றித்திரிந்த 28 யாசகர்களை, கண்டி பொலிஸார் இன்று(6) கைதுசெய்துள்ளனர்.
கண்டி மாநகரசபையின் பொதுசுகாதார அதிகாரிகள், கண்டி பொலிஸார் இணைந்து மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போதே, யாசகர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நகரிலிருந்து வெளியேறுமாறு இரண்டு வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டதாகவும் எனினும் அதனை மீறிச் செயற்பட்டதாலேயே யாசகர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் கண்டி நகரசபையின் தலைவர் அமலி நவரத்ன தெரிவித்தார்.
யாசகர்களைக் கைதுசெய்யும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
கண்டி நகர் மணிக்கூட்டுக்கோபுரம் அமைந்துள்ளப் பகுதி, பஸ் தரிப்பிடம் ஆகிய பகுதிகளில் இரவுப்பொழுதைக் கழிக்கும் யாசகர்கள் மற்றும் நகர் முழுவதும் சுற்றத்திரியும் யாசகர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago