2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

தனியார் வகுப்புகளுக்கு தடைவிதிக்கும் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றம்

Sudharshini   / 2016 பெப்ரவரி 29 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

'ஊவா மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் தனியார் வகுப்புகளுக்குத் தடை விதிக்க வேண்டும்' எனக் கோரி, ஊவா மாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் உதார சொய்சாவினால் சமர்பிக்கப்பட்ட பிரேரணை, ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இப்பிரேரணையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

'ஊவா மாகாணத்தில்; போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத மதுபான விற்பனை தற்போது அதிகரித்துள்ளது. பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு  எதிரான வன்முறைகளும் அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டில், பதினாறு வயதுக்குட்பட்ட 56 சிறுமிகள் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அறநெறி கல்வித் துறையிலிருந்து இளைஞர்கள் விலகிச் சென்று முறையற்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதே இதற்கு முக்கிய காரணமாகும். இந்நிலை தொடர்வதற்;கு அனுமதிக்க முடியாது. இளைஞர் சமூகத்தை அறநெறிக் கல்வித் துறையில் ஈடுபட வைக்கும் செயற்பாடுகளை, ஊவா மாகாண சபை முன்னெடுக்க வேண்டும்.

ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் தனியார் வகுப்புகளுக்கு தடை விதிக்கப்படும் பட்சத்தில், விகாரைகள், ஆலயங்கள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்களில் நடைபெறும் அறநெறி வகுப்புக்களில் மாணவ, மாணவிகளை கலந்துகொள்ளச்செய்ய முடியும்;. இளைஞர் சமூகத்தினரையும் இவ்வேலைத்திட்டத்தில் இணைத்துக்கொள்ள ஆசிரிய சமூகத்தினர், பெற்றோர், மத குருமார்கள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். காலப்போக்கில் அனைவரும் அறநெறி செயற்பாடுகளில் ஈடுபடும்போது குற்றச் செயல்கள் பெருமளவில் குறைவடையும் என நம்புகின்றோம்' என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இப்பிரேரணை, ஊவா மாகாண சபையில் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டதுடன் சபை உறுப்பினர்களில் பெரும்பாலானோர் பிரேரணையை ஆதரித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .