Kogilavani / 2016 ஜூன் 19 , மு.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

20 பேர்ச் காணியுடன் தனிவீட்டைக் கட்டித் தருமாறுக் கோரி யட்டியந்தோட்டை, லெவண்ட் தோட்ட மக்கள், தோட்டத்திலுள்ள மாரியம்மன் ஆலயத்துக்கு முன்பாக மௌன பிரார்த்தனையிலும் சாத்வீகப் போராட்டத்திலும் சனிக்கிழமை(19) ஈடுபட்டனர்.
மலையக மண்ணுக்கு சமாதானம் அமைப்பின் இணைப்பாளர் வி.கணபதிபிள்ளை மற்றும் சௌமிய இளைஞர் நிதியத்தின் தலைவர் எஸ்.பி.அந்தோனிமுத்து தலைமையில் இவ்விரு நிகழ்வுகளும் இடம்பெற்றன.
'20 பேர்ச் காணியுடன் வீடுக் கட்டித் தரவேண்டும்', 'இந்திய வீடமைப்புத் திட்டம் கேகாலை மாவட்டத்துக்கும் பெற்றுத்தரப்பட வேண்டும்' என்ற கோரிக்கைகளை முன்வைத்தே மேற்படி சாத்வீகப் போராட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வுகளுடன் இணைந்ததாக, கடந்த மாதம் 17ஆம் திகதி, அரநாயக்க, களுப்பஹன, தெகியோவிற்ற- டென்ஸ்வத்தை ஆகியப் பகுதிகளில் மண்சரிவினால் உயிரிழந்த உறவுகளுக்கான ஆத்மசாந்தியும் நடத்தப்பட்டது.

2 hours ago
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
11 Apr 2026