2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

தப்பிய ஓடிய தொற்றாளி மடக்கிப் பிடிப்பு

Kogilavani   / 2021 பெப்ரவரி 25 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

எம்பிலிப்பட்டிய வைத்தியசாலையிலிருந்து, நேற்று (24) தப்பிச்சென்ற கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர், வீடொன்றில் மறைந்திருந்த நிலையில், எம்பிலிப்பிட்டிய பொலிஸாரால், கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மேற்படி நபருக்கு மேற்கொள்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த நபர் வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், பொலிஸாரின் உதவியுடன் அந்நபரை கண்டறிவதற்கான நடவடிக்கையில், பொதுசுகாதார பரிசோதகர்கள் ஈடுபட்டனர்.

எம்பிலிப்பிட்டிய புதிய நகர வீடொன்றில் பதுங்கி இருந்த நிலையில், மேற்படி நபர் கைதுசெய்யப்பட்டதுடன், கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X