Kogilavani / 2021 மே 03 , பி.ப. 01:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
இந்தியா தமிழ்நாட்டின் புதிய முதல்வராகப் பதவியேற்கவுள்ள திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் செயலாளர் நாயகமும் தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் புரையோடிப் போயுள்ள இனப் பிரச்சினைக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க ஸ்டாலின், தீர்வு வழங்குவதற்கு ஒத்துழைக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஷ்ணன் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
மேலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், இரு நாடுகளுக்கும் இடையிலான மீனவர் பிரச்சினைக்கும் நிரந்தர தீர்வை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் தி.மு.க வின் வெற்றி, இலங்கை தமிழர்களுக்கு அர்த்தமுள்ள வெற்றியாக அமையும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தமிழக முதல்வருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள முன்னணியின் பொதுச்செயலாளர் நாயகம் விஜேசந்திரன், “முயற்சி செய்தால் முடியாதது ஒன்றும் இல்லை என்பதை ஸ்டாலின் நிருபித்துள்ளார்” என்றும் அவருடைய தந்தையார் அமரர் கருணாநிதியின் மறைவுக்கப் பின்னர் தி.மு.க பின்னடைவைச் சந்திக்கும் என பலரும் கருதியபோது சரியான தலைமைத்துவத்தைக் கொடுத்து இன்று ஆட்சியை கைப்பற்றியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago