Niroshini / 2021 மே 02 , பி.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மகேஸ் கீர்த்திரத்ன
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டு வரும் நிலையில், பலர் இதனை புறக்கணித்து வருவதாகத் தெரிவித்த மாத்தளை மாவட்ட கொவிட் நிர்வாகக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் மேஜர் ஜெனரல் நிஷாந்த, இதனால், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தை திறக்கப்படுவதற்கு இன்னும் காலதாமதம் ஏற்படும் எனவும் கூறினார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், தற்கெயலான முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் விளைவாகவே தம்புளளை பொருளாதார மத்திய நிலையம் மூடப்பட்டதாகவும், இதையடுத்து, அங்குள்ள அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டு வரும் நிலையில், பலர் இதனை தவிரித்து வருவதாகவும், இதனால் பெரும் சிக்கல் நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
தம்புள்ளை பொருளாதார மையத்தை மூன்று நாள்களுக்கு மாத்திரமே மூடுவதற்கான முடிவு இருந்தபோதிலும், ஊழியர்கள் பி.சி.ஆர் சோதனைகளைத் தவிர்த்து வருவதால், நிலையத்தை மீண்டும் திறக்கப்படுவது தாமதமாகுமென்றும், அவர் கூறினார்.
“தம்புள்ளை பொருளாதார மையத்தில் உள்ள அனைத்து ஊழியர்களிடமும் பிசிஆர் சோதனைகளை நடத்திய பின்னர், அவர்களில் தொற்றாளர்களையும் அவர்களுடன் நெருங்கி பழகியவர்களையும் கண்டறிந்து தனிமைப்படுத்திய பின்னரே, பொருளாதார மையம் திறக்கப்படும்” என்றும், அவர் தெரிவித்தார்.
2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago