Editorial / 2025 நவம்பர் 02 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ்
தலவாக்கலை நகரில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தலவாக்கலை நகரில் பொதுமக்களால் சனிக்கிழமை (01) எதிர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
தலவாக்கலை நகரில் தீபாவளி தினத்தன்று அதிகாலை வேளையில் தலவாக்கலை நகர மத்தியில் பட்டாசுகளை கொளுத்தி கொண்டிருந்தபோது கெப் ரக வாகனமொன்றில் மோதி இழுத்துச் செல்லப்பட்டு ஆபத்தான நிலையில் நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி வௌ்ளிக்கிழமை (31) உயிரிழந்தார்.
சென்கிளையர் புகையிரத விடுதியை தற்காலிக வசிப்பிடமாக கொண்ட செல்வநாதன் புஸ்பகுமார் (வயது 28) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 20 ஆம் திகதி தீபாவளி தினத்தன்று இரவு வேளையில் தலவாக்கலை பேருந்து தரிப்பிடத்தில் அருகாமையில் பிரதான வீதியில் தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு பட்டாசு கொளுத்தி கொண்டிருந்த இளைஞர்கள் குழு ஒன்றில் இருந்த எஸ்.புஸ்பகுமார் (வயது28) என்ற இளைஞனும் இருந்துள்ளார்.
இதன் போது பிரதான வீதியில் சென்ற கெப் வாகனம் ஒன்று திடீரென இளைஞர்கள் மீது மோதியுள்ளது.இதில் இரு இளைஞர்கள் காயம் அடைந்தனர். படுகாயமடைந்த குறித்த இளைஞன் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
சம்பவத்தன்று லொறியின் சாரதி தலவாக்கலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். குறித்த இளைஞரின் சடலம் சனிக்கிழமை (01) வைத்தியசாலையில் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு அவரின் வீட்டுக்கு கொண்டு வரும் வழியில் தலவாக்கலை நகரில் இவ்விபத்து சம்பவித்த இடத்தை வந்தடைந்தபோது பிரதான வீதியை மறித்து அணிதிரண்ட மக்கள் குறித்த இளைஞரின் மரணத்திற்கு நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது ஒரு மணித்தியாலம் வரை வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற சாரதிக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என போராட்டக்காரர்களால் வலியுறுத்தப்பட்டது. சம்பந்தப்பட்ட சாரதிக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தலவாக்கலை பொலிஸார் உறுதியளித்ததையடுத்து அவ்விடத்திலிருந்து மக்கள் கலைந்து சென்றனர்.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago