2021 மே 14, வெள்ளிக்கிழமை

தாயும் சேயும் சடலங்களாக மீட்பு

Kogilavani   / 2017 மே 25 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மு.இராமச்சந்திரன், காமினி பண்டார, செ.தி.பெருமாள்

லக்ஷபான  நீர்வீழ்ச்சி பகுதியிலிருந்து,  2 மாதங்களேயான ஆண் குழந்தையின் சடலத்தையும், 29 வயதுடைய பெண்ணொருவரின்,  சடலத்தையும் நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார், இன்றுக் காலை மீட்டுள்ளனர்.

நோட்டன் பிரிட்ஜ்,  தெப்பட்டன் தோட்டத்தைச் சேர்ந்த செல்வராஜ் சுசீலா (வயது 22) மற்றும் அவரது இரண்டு மாத ஆண் குழந்தையே, இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

திரிபோசா வாங்குவதற்காக,  நேற்றுக் காலை கொத்தலனை சனசமூக நிலையத்துக்குச் சென்ற மேற்படி இருவரும், நேற்று மாலைவரை வீடு திரும்பவில்லை என்று, பெண்ணின் உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு பதிவுசெய்திருந்தனர்.

இந்நிலையிலேயே, மேற்படி இருவரின் சடலங்களையும் பொலிஸார் இன்றுக் காலை மீட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .