Freelancer / 2021 டிசெம்பர் 31 , மு.ப. 08:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
பசறை சுகாதார பிரிவிற்கு உட்பட்ட நகரிலுள்ள வெதுப்பகங்கள், தேநீர் கடைகள் மற்றும் பலசரக்கு கடைகளை பசறை சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் சுகாதார பிரிவினர்கள் இனைந்து நேற்றைய தினம் திடீர் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது காலாவதியான பாவனைக்கு உதவாத பொருட்களை கைப்பற்றி அந்தந்த கடைகளிலேயே மண்ணெண்ணை ஊற்றி அழிக்கப்பட்டுள்ளது.
மேலும், காலாவதி திகதி ஒட்டப்படாத பொருட்களும் சுகாதார பிரிவினரால் கைப்பற்றப்பட்டது.
இவ்வாறான கடை உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாகவும் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .