Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 ஜூலை 27 , பி.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமசந்திரன்
தேசிய தாய்ப்பால் ஊட்டும் வாரம், எதிர்வரும் 30ஆம் திகதி ஹட்டனில் ஆரம்பமாகவுள்ளது.
தேசிய தாய்ப்பால் ஊட்டுவாரத்தின் முக்கியத்துவம் தொடர்பில் தெளிவுபடுத்தும் நிகழ்வு, தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஹட்டன் பிராந்திய காரியாலத்தில், புதன்கிழமை மாலை இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன்,
“பெருந்தோட்டப் பகுதிகளில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்ட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, இம்மாதம் 30ஆம் திகதி, ஹட்டன் பிரின்ஸ் மண்டபத்தில் தேசிய தாய்ப்பால் வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
“சுகாதார போஷணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையில் ஆரம்பமாகவுள்ள இந்த நிகழ்வில், அமைச்சர் பழனி திகாம்பரம் சிறப்பு அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார்.
தேசிய தாய்ப்பால் ஊட்டும் வாரம் எதிர்வரும் 1 முதலாம் திகதி முதல் 7 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இத்தினங்களில், தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலான விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் பல முன்னெடுக்கப்படவுள்ளன. தேசிய தாய்ப்பால் ஊட்டும் வாரத்தின் ஊடாக, தாயப்பால் ஊட்டலிலுள்ள முக்கியத்துவத்தை, மலையக மக்களும் உணர்ந்து விழிப்புணர்வு பெறவேண்டும் என்பதே, ஏற்பாட்டாளர்களின் நோக்கமாகும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .