Janu / 2025 ஜூலை 31 , பி.ப. 02:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
1,200 கிலோ கிராம் அடங்கிய 20 பொதிகள் அடங்கிய No. 1 டஸ்ட், 60 கிலோ கிராம் தேயிலை தூளை திருடிய குற்றச்சாட்டை ஒத்துக்கொண்ட தோட்ட உதவி முகாமையாளர் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில், புதன்கிழமை (30) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஆர்.பி.கே.பிளான்டேசனுக்கு உரித்தான மஸ்கெலியா பிரவுன்ஸ்வீக் தோட்ட தேயிலை தொழிற்சாலையில் இருந்து 840,000 ரூபாய் பெறுமதியான No. 1 டஸ்ட், தேயிலை தூள் 60 கிலோ கிராம் நிறை கொண்ட 1,200 கிலோ கிராம் அடங்கிய 20 பொதிகள் கடந்த 23 ம் திகதி களவாடப்பட்டுள்ளது என தோட்ட முகாமையாளர் நிலுஷான் மதுசங்க ஜயவீர , மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமாரவின் பணிப்புக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்க பட்டு தேயிலை தொழிற்சாலையில் பொருத்த பட்டு இருந்த சீ.சீ.டி வி கெமராக்கள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது..
23.07.2025.அன்று இரவு 8.30.மணி தொடக்கம் 10.30 மணிக்குள் தேயிலை தூள் அடங்கிய 20 பொதிகள் தோட்ட உதவி முகாமையாளரால் லொறிக்கு ஏற்றப் பட்டது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து தோட்ட உதவி முகாமையாளரை மஸ்கெலியா பொலிஸார் கைது செய்து ஹட்டன் நீதிமன்றில் ஆஜர் படுத்தினர். அவர், ஜூலை 25 ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
தேயிலை தூளை திருடியதை பிரதி முகாமையாளர் ஒப்புக் கொண்டதையடுத்து, களவாடிய 1200 கிலோ கிராம் தேயிலை தூளுக்கான ரூபாய் 840,000 பணத்தை கம்பெனிக்கு செலுத்திய பிரவுன்சீக் தோட்ட உதவி முகாமையாளர். உரிய பற்றுச்சீட்டை நீதி மன்றுக்கு சமர்ப்பித்துள்ளார்.
அதனையடுத்து 500,000 ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரபிணையில் விடுதலை செய்யப்பட்ட அவரை எதிர்வரும் 10.09.2025 அன்று மன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.
செ.தி.பெருமாள், கௌசல்யா
18 minute ago
36 minute ago
41 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
36 minute ago
41 minute ago
42 minute ago