R.Tharaniya / 2025 நவம்பர் 23 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டயகம வெஸ்ட் தோட்ட பிரிவில்சனிக்கிழமை(22) அன்று மாலை 2.00 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீயினால் 5 வீடுகளை கொண்ட தொடர் குடியிருப்பில் இரண்டு வீடுகள் முற்றாக எரிந்து சாம்பலாக்கியுள்ளது.
குறித்த தீ பரவலில் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களின் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் சேதமாகியுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் உறவினர்கள் வீடுகளுக்கு தற்காலிகமாக இடம்பெயர்ந்துள்ளனர்.
தீ ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை டயகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




எஸ் சதீஸ்
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago