Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 மே 03 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா கல்வி வலயத்தில் கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியின் 20வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நவீன தொழில்நுட்ப கண்காட்சி இன்று (03.05.2023) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பாடசாலை அதிபர், ஆசிரியர்களின் வழிகாட்டலின் ஊடாக பாடசாலை மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “மெய்நிகர்” என்ற தொனிப்பொருளிலான கண்காட்சி, கல்லூரியில் ஆரம்பமாகியது.
நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளருமான ஜீவன் தொண்டமான் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு இக்கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார்.
இன்றும், நாளையும் நடைபெறுகின்ற இந்தக் கண்காட்சயில், இந்த நவீன காலத்திற்கேற்ப தமது வாழக்கை மற்றும் இதர செயற்பாடுகளை எவ்வாறு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மேற்கொள்ளலாம் என இந்த கண்காட்சி அமையப்பெற்றுள்ளன.
அதேவேளை, கண்காட்சியை பார்வையிட்ட அமைச்சர் ஜீவன் தொண்டமான், ஆற்றல்கள் மூலம் தமது திறமைகளை வெளிப்படுத்திருந்த மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்த அமைச்சர், அவர்களை வழிநடத்திய அதிபர் உள்ளிட்ட ஆசிரியர் குழாம்க்கு நன்றியை தெரிவித்தார்.
22 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
30 minute ago