Editorial / 2018 ஓகஸ்ட் 05 , பி.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}


எஸ்.கணேசன்
டிக்கோயா தோட்டத்துக்குச் சொந்தமான டன்பார் பிரிவில் உள்ள ஐந்து ஏக்கர் காணியை, தனிநபர் ஒருவர் சொந்தம் கொண்டாடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, டன்பார் தோட்டத் தொழிலாளர்கள், ஹட்டன் எபோஸ் பிரதான வீதி, டன்பார் சிறுவர் பாராமரிப்பு நிலையத்துக்கு முன்பாக, வீதியை மறித்து, நேற்று (04) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த தோட்டத்தில், சுமார் 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.
பரம்பரை பரம்பரையாக, எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி, லயன் குடியிருப்பில் வாழ்ந்து வரும் தமக்கு, தோட்ட நிர்வாகம் ஒரு துளியளவு நிலத்தைக்கூட வழங்கவில்லை என்று குறிப்பிடும் மேற்படி குடும்பங்கள், ஆனால், தோட்டத்துக்கு எவ்விதத்திலும் தொடர்புபடாத ஒருவர், தோட்டக் காணியை ஆக்கிரமித்து, உரிமை கொண்டாடி வருகிறாரெனவும் சாடின.
அத்துடன், குறித்த காணியில் பணிபுரியுமாறு, தோட்ட நிர்வாகம், தம்மைப் பலவந்தப்படுத்தி வருகின்றதெனத் தெரிவிக்கும் தொழிலாளர்கள், தேயிலை மலைக்கு வேலைக்குச் சென்றால், பொலிஸாரை வரவழைத்துக் கைதுசெய்வதாக, குறித்த நபர் தம்மை அச்சுறுத்துவதாகவும் தெரிவித்தனர்.
தமது சொந்தத் தேவைகளுக்காக நகரங்களுக்குச் செல்லும்போதும், குறித்த நபர் தம்மை அச்சுறுத்துவதாகவும் தொழிலாளர்கள் இதன்போது தெரிவித்தனர்.
எனவே, தமது பிரச்சினைக்குத் தீர்வொன்றைப் பெற்றுத்தர வேண்டும் என்று வலியுறுத்தும் தொழிலாளர்கள், இல்லாதபட்சத்தில், டிக்கோயா தோட்டத்துக்கு உட்பட்ட அனைத்துத் தோட்டங்களையும் சேர்ந்த தொழிலாளர்களை வீதிக்கு இறக்கி, பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் எச்சரித்தனர்.
10 minute ago
22 minute ago
27 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
22 minute ago
27 minute ago
35 minute ago