Editorial / 2019 டிசெம்பர் 02 , பி.ப. 08:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைத் தோட்டத் தொழிலாளர் கல்வி அறக்கட்டளை (CEWET) வழங்கும் புலமைப்பரிசிலுக்கு, தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இந்தப் புலமைப்பரிசில், கல்விப் பொதுத் தராதர உயர்தரம், பட்டப்பின் படிப்பு, இலங்கையிலுள்ள அரச கல்லூரிகளில், தொழிற்கல்வி/ தொழில்நுட்பக் கல்வி கற்றும் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
இதற்காக விண்ணப்பிக்கும் மாணவர்கள், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தில் 6 சித்திகளை (6C) பெற்றிருக்கவேண்டும் என்றும் 25 வயதுக்கு குறைந்தவராக இருக்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்களுடன், பிறப்பத்தாட்சிச் சான்றிதழின் நகல், சா/த அல்லது உ/த பெறுபேறுகளின் நகல்கள், பெற்றோருக்கு வழங்கப்பட்ட சமீபத்திய சம்பளப் பட்டியல், பெற்றோரின் வேலையை உறுதிப்படுத்தும் தோட்டக் கண்காணிப்பாளரின் சான்றிதழ் ஆகியவை இணைக்கப்படல் வேண்டும். இது தொடர்புடைய விண்ணப்பத்தை, www.hcicolombo.gov.in எனும் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.
அத்துடன், இந்த விண்ணப்பப்படிவங்களை, இந்திய உயர்ஸ்தானிகராலயம், இல 36 - 38, காலி வீதி, கொழும்பு 3 அல்லது இந்திய உதவி உயர்ஸ்தானிகராலயம், இல 31, ராஜபிள்ளை மாவத்தை, கண்டி ஆகிய முகவரிகளிலும் பெற்றுக்கொள்ள முடியும்.
பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்கள், கௌரவச் செயலாளர், இலங்கைத் தோட்டத் தொழிலாளர் கல்வி அறக்கட்டளை (CEWET), மேற்பார்த்து (C/O) இந்திய உயர்ஸ்தானிகராயலம், தபால்பெட்டி இலக்கம் 882, கொழும்பு 3 எனும் முகவரிக்கு, டிசெம்பர் மாதம் 27ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கவும்.
15 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
31 minute ago