Editorial / 2019 மே 04 , பி.ப. 01:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கணேசன், ஆ.ரமேஷ்
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகாவத்தை தோட்ட நிர்வாக அதிகாரிக்கு எதிராக, அத்தோட்ட மக்கள், இன்று எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
போகாவத்தை தோட்டத்தில் கடந்த இரண்டு வருடங்களாக மூடப்பட்டிருக்கும் தேயிலை தொழிற்சாலையில் பொருத்தப்பட்டிருந்த இடிதாங்கியின் உலோகங்களை, இன்று களவாடப்பட்ட சம்பவம் தொடர்பில், தொழிற்சாலை காவலில் ஈடுப்பட்டிருந்த இரண்டு காவலாளிகளை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணைக்குட்படுத்தப்பட்டமையை எதிர்த்தே, அத்தோட்ட மக்கள் இந்த எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
அதாவது, மூடப்பட்டிருக்கும் இந்த தொழிற்சாலையில் உயர்தர தேயிலை உற்பத்திக்கான விலை உயர்ந்த இயந்திரங்கள் அங்கு பொருத்தப்பட்டுள்ள நிலையில் தொழிற்சாலை பாதுகாப்புக்கென தொழிற்சாலையை சுற்றி 16 சீ.சீ.டிவீ கமெராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
அதே சமயத்தில் களவாடப்பட்டதாக கூறப்படும் இடி தாங்கி உலோகங்களை களவாடியவர் யார் என்பதை சீ.சீ.டீ.வீயின் உதவியோடு கண்டுபிடிக்க முடியும் என்பதை, தோட்டத் தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அத்துடன், தோட்ட நிர்வாக அதிகாரி பொலிஸாருடன் தனிமையில் சீ.சீ.டீ.வீயின் பதிவுகளை பார்த்து விட்டு வெறுமனே தோட்ட தொழிற்சாலை காவலாளி இருவரை பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்துமாறு, பொலிஸாரிடம் தோட்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஆனால், சீ.சீ.டீ.வீ கெமராவின் அனைத்து பதிவுகளையும் தோட்ட கமிட்டிகள் முன்னிலையில் பார்வையிட வேண்டும் என வலியுறுத்தியுள்ள மக்களை எதிர்த்து தோட்ட அதிகாரி தன்னிச்சையாக செயற்பட்டதை கண்டித்தே, அப்பகுதி தோட்டத் தொழிலாளர்கள், இந்த எதிர்ப்பு நடவடிக்கையை தோட்ட தொழிற்சாலை முன்பாக சுமார் 6 மணித்தியாலயங்கள் முன்னெடுத்தனர்.
இதன்போது எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளியை இணங்காணும் வரை தொழில் பகிஷ்கரிப்பில் ஈடுப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
அத்துடன், விலை உயர்ந்த இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ள தொழிற்சாலையை மீண்டும் திறக்க கோரியும் கோஷமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
11 minute ago
31 minute ago
45 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
31 minute ago
45 minute ago
2 hours ago