Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
R.Maheshwary / 2022 ஜூலை 20 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதத்.எச்.எம்.ஹேவா
ஹட்டன்- டிக்கோயா நகர சபையால் சீல் வைத்து மூடப்பட்ட வர்த்தக நிலையம் ஒன்று, உடைக்கப்பட்டு உள்நுழைந்துள்ளமை தொடர்பில் ஹட்டன் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக ஹட்டன்- டிக்கோளா நகர சபையின் தவிசாளர் சடையன் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
ஹட்டன்- பழைய சந்தைப் பகுதியில் உள்ள வர்த்தக கட்டடம் நகர சபைக்கு சொந்தமான நிலையில், அதன் உரிமையாளர் உயிரிழந்துள்ளார்.
குறித்த உரிமையாளர் உயிரிழப்பதற்கு முன்பு தனது வர்த்தக நிலையத்தை தனது மகளுக்கும் மனைவிக்கும் வழங்குமாறு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளதால், அவர்களுக்கு அதனை வழங்க நகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த நிலையில், அந்த வர்த்தக நிலையத்தை வேறு சிலர் கையகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதால் நகர சபை மூலம் சீல் வைத்து அந்த வர்த்தக நிலையம் மூடப்பட்டுள்ளது.
அவ்வாறான நிலையில் அதனை கையகப்படுத்த முயன்ற நபர், தற்போது நகர சபையின் பூட்டை உடைத்து வர்த்தக நிலையத்துக்குள் நுழைந்துள்ளார்.
இதனால் அந்த நபருக்கு எதிராக ஹட்டன் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .