Freelancer / 2022 மார்ச் 12 , மு.ப. 07:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலைவாஞ்ஞன்
சிவனொளிபாத மலையை தரிசனம் செய்து விட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் வேளையில், கினிகத்தேனையில் நண்பர்களுடன் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் பலியாகி உள்ளார்.
இச் சம்பவம் கினிகத்தேனை நகருக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில் நேற்று மாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் ஆணமடுவ பிரதேசத்தைச் சேர்ந்த கவிந்து திஸார வயது 22 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நீராடிக் கொண்டிருக்கும் போது நீரில் இழுத்துச் செல்லப்பட்டு கற்குகையில் இறுகியதன் காரணமாக இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த நபரின் சடலத்தினை கெனில்வேத் தோட்ட மக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து மீட்டுள்ளனர்.
சடலம் பிரேத பரிசோதனைககாக கினிகத்தேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (R)


5 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
18 Jan 2026