2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

நீர்கொழும்பு வர்த்தகர் நுவரெலியாவில் சடலமாக மீட்பு

R.Maheshwary   / 2022 ஜனவரி 13 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

நுவரெலியா -பட்டிபொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட "டேப்பன்டைல்" வனப்பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று, (13) மதியம் 12.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், நீர்கொழும்பு குணரத்தின மாவத்த 50 ஏக்கர் கிராமம் பகுதியை சேர்ந்த சத்துருவான் ஹப்புகாமி (45) என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்,இவர் வர்த்தகர் என்றும்  பொலிஸார் தெரிவித்தனர்.

 பட்டிப்பொல நகரில் இருந்து சுமார் 700 மீட்டர் தொலைவில் உள்ள  உலக முடிவு பகுதிக்கு செல்லும் பகுதியில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

 தன்னுயிரை மாய்த்து கொண்ட நிலையில், இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் மரண விசாரணையின் பின்னர் பிரேத பரிசோசணைக்காக  சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் எனவும் தெரிவித்த பொலிஸார், உயிரிழந்த நபர் பயணித்த கார் கைப்பற்றப்பட்டுள்ளது என்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .