2026 ஜனவரி 12, திங்கட்கிழமை

மருதங்கேணியில் ஐஸூடன் ஒருவர் கைது

Editorial   / 2026 ஜனவரி 12 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பூ.லின்ரன்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில்   ஞாயிற்றுக்கிழமை (11) அன்று ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மருதங்கேணி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மருதங்கேணி கடற்கரை பகுதி முழுவதும் ஒரு விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கை மற்றும் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது 

இதன் போது மருதங்கேணி கடற்கரை பகுதியில் வாடி ஒன்றில் தங்கி இருந்து கடற்றொழில் செய்யும் மன்னார் பேசாலை பகுதியை சேர்ந்த சுதர்சன் எனும் 39 வயதுடைய நபரின் உடமையில் இருந்து 4.780 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது 

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் ஐஸ் போதைப் பொருளும் மேலதிக சட்ட நடவடிக்கைக்கு நீதி மன்றத்தில்  ஞாயிற்றுக்கிழமை (11) அன்றே மருதங்கேணி பொலிஸாரால் முற் படுத்தப்பட்டது 

ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணை செய்ய மருதங்கேணி பொலிஸார் நீதிமன்றில் அனுமதி கோரிய நிலையில் மேலும் மூன்று நாட்கள் குறித்த சந்தேக பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணை செய்ய கிளிநொச்சி நீதிமன்ற நீதவான் அனுமதி வழங்கினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .