Freelancer / 2023 மார்ச் 04 , மு.ப. 08:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி சந்ரு
ஜனவரி 20ஆம் திகதி நானுஓயா - ரதெல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஏழு பேர் உயிரிழந்ததுடன் 53 பேர் படுகாயமடைந்திருந்தனர்.
இதில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு கொழும்பு தர்ஸ்டன் கல்லூரியில் அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க ஆசிரியர்கள் மாணவர்களிடம் சேர்க்கப்பட்ட 14 இலட்சம் நிதி உதவி இன்று வழங்கப்பட்டது .
இதில் உயிரிழந்த ஒவ்வொரு குடும்பத்தினருக்கு இரண்டு இலட்சம் ரூபாய் வழங்கினர் .
வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் சிறுமியின் வங்கி கணக்கில் கல்லூரியில் காப்புறுதி திட்டம் ஊடாக 8 இலட்சம் ரூபாய் வைப்பிலிடப்பட்டது.
இறந்தவர்களின் திதி கொடுப்பதற்கான செலவினையும் கல்லூரி ஏற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது .
2 hours ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
21 Mar 2026