2026 ஜனவரி 21, புதன்கிழமை

நால்வரை காயப்படுத்திய சிறுத்தைக்கு 3 நாள் காலக்கெடு

R.Maheshwary   / 2021 ஓகஸ்ட் 01 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீலமேகம் பிரசாந்த்

பூண்டுலோயா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட, டன்சினன் தோட்ட அக்கரமலை பிரிவில் சிறுத்தை தாக்கியதில் நான்கு தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 இந்தச் சம்பவம்  நேற்று (31) பகல் இடம்பெற்றுள்ளது.

குறித்த தோட்டத்தின் நான்காம் இலக்க தேயிலை மலையில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த ஆண் தொழிலாளர்களையே  சிறுத்தை தாக்கியுள்ளது.

சிறுத்தையின் தாக்குதலுக்கு இலக்கான  நால்வரும், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளள்ளனர்.  3 நாள்களுக்குள் குறித்த சிறுத்தையை தேடி கண்டுபிடித்து விடுவதாக உறுதியளித்துள்ள  நுவரெலியா வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X