2025 ஜூலை 14, திங்கட்கிழமை

நாளை வாக்கெடுப்பு

Kogilavani   / 2017 செப்டெம்பர் 18 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

மத்திய மாகாண சபையின் மாதாந்த அமர்வு, கண்டி பல்லேகலையிலுள்ள மாகாண சபைக்கட்டடத்தில், சபைத் தவிசாளர் எல்.டீ.நிமலசிறி தலைமையில், நாளை (19) நடைபெறவுள்ள நிலையில், அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலமும் வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் அண்மையில் வெளியிடப்பட்ட சிறுவர் பாதுகாப்புத் திட்டம் தொடர்பாக, மத்திய மாகாண சபை உறுப்பினர்களுக்கு அறிவூட்டும் நிகழ்வும் இன்று நடைபெறவுள்ளது.

மேலும், மத்திய மாகாண அரச ஊழியர்களுக்கென 33 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத் தொகுதி இன்றுக் காலை 7.45 மணிக்கு திறந்துவைக்கப்பட உள்ளதுடன், கண்டி மா நகர சபைக்கான உபகரணங்களும் வழங்கி வைக்கப்படவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .