Kogilavani / 2021 பெப்ரவரி 24 , பி.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.புவியரசன், வாஹிட் குத்தூஸ்
மூத்த எழுத்தாளரும் மல்லிகை சஞ்சிகையின் ஆசிரியருமான அமரர் டொமினிக் ஜீவா இயற்கையெய்தி ஒரு மாதம் நிறைவுபெறுவதை நினைவுகூரும் முகாமாக, ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள நினைவஞ்சலிக் கூட்டம், பதுளை, விகாரகொட, புகையிரத வீதியில் அமைந்துள்ள சங்க காரியாலயத்தில், ஞாயிற்றுக்கிழமை (28) பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆ.முத்துலிங்கம் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், டொமினிக் ஜீவா குறித்த நினைவுரையும் அவரது இலக்கிய, சமூக மேம்பாட்டுப் பணிகள் குறித்தும் கருத்தாடல்கள் இடம்பெறவுள்ளன.
இந்நிகழ்வில், இலக்கிய ஆர்வலர்களும் இடதுசாரி தோழர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
20 minute ago
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
21 Jan 2026
21 Jan 2026