2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

நிர்க்கதியானவர்கள் பத்திரமாக அனுப்பப்பட்டனர்

R.Maheshwary   / 2022 ஏப்ரல் 03 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

திடீரென நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவால் நிர்க்கதிக்குள்ளான  சிவனொளிபாதமலை யாத்திரிகர்களை மீண்டும் அவர்களது சொந்த இடங்களுக்கு பத்திரமாக அனுப்பும் நடவடிக்கையை ஹட்டன் மற்றம் நல்லதண்ணி பொலிஸார் முன்னெடுத்தனர்.

மத்திய மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன மற்றும் ஹட்டன் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி விஜித அல்விஸ் ஆகியோரின் மேற்பார்வையின் கீழ், குறித்த யாத்திரிகர்களை சொந்த இடங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நேற்று (2) சிவனொளிபாதமலை யாத்திரையை முடித்து விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த சுமார் 29 பேர் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்த நிலையிலேயே, பொலிஸார் தலையீட்டினால் அவர்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X