Janu / 2023 ஓகஸ்ட் 14 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊவா பரணகம ரத்தம்ப தியகொலார ஆற்றில் நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் ஞாயிற்றுகிழமை (13) மாலை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அம்பகஸ்தோவ பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா கந்தபொல பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை (13) மாலை தனது சகோதரியின் வீட்டிற்கு வந்திருந்த இளைஞன் தனது உறவினருடன் ஆற்றுக்குச் நீராட சென்ற நிலையில், நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து இளைஞனை தேடும் நடவடிக்கைகளை மேற்கொண்ட போது இளைஞன் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது இளைஞன் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் தற்போது ஊவா பரணகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் அம்பகஸ்தோவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா
26 minute ago
37 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
37 minute ago
2 hours ago
2 hours ago