2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

நீர்வழங்கல் முறையை விருத்திசெய்ய நடவடிக்கை

Kogilavani   / 2017 ஒக்டோபர் 25 , பி.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

குண்டசாலை - ஹாரகம பகுதி மக்களின் நலன் கருதி, நீர்வழங்கல் முறையை விருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பாதஹேவாஹெட்ட மற்றும் குண்டசாலை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உரித்தான 14 கிராமங்களில் வசிக்கும் 6,000 குடும்பங்கள், சுத்தமான குடிநீர் வசதிகள் இன்றி பல்வேறான சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

அவர்கள் படும் கஷ்டத்தை கவனத்திற் கொண்டு, சமுர்த்தி பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்கள் வசிக்கின்ற அநுரகம, புபுதுகம, முதுணகடை உட்பட 14 கிராம மக்களின் நீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக, பொது அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக கட்டியெழுப்பப்பட்டுள்ள சமுர்த்தி அபிவிருத்தி நிதியத்தின் நிதியை பயன்படுத்தி, குண்டசாலை - ஹாரகம நீர்வழங்கல் முறையை விருத்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் மலைநாட்டு உரிமைகள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .