Editorial / 2024 நவம்பர் 13 , பி.ப. 07:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிவா ஸ்ரீதரராவ்
காவத்தை நீலகாமம் இலக்கம் 4 தோட்டப் பிரிவின் லயன் குடியிருப்பில் பாரிய ஆல மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரி மாவட்டத்தில் புதன்கிழமை (13) மாலை பெய்த அடை மழை காரணமாக காவத்தை நீலகாமம் இலக்கம் 4 தோட்டப் பிரிவின் லயன் குடியிருப்பில் பாரிய ஆல மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் ஆலயம் உட்பட குறித்த லயன் குடியிருப்பின் 7 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் இதில் ஆறு குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதில் பலத்த காயமடைந்த இருவர் வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் P.முத்துசாமி (59 வயது) இரத்தினபுரி போதனா வைத்தியசாலையிலும்
M. அழகம்மா (74 வயது) காவத்தை ஆதார வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.




3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago