Janu / 2025 மே 27 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா பகுதியில் பெய்த கனமழையுடன் கூடிய பலத்த காற்று காரணமாக பெரியளவிலான சைப்ரஸ் மரங்கள் முறிந்து விழுந்ததால், செவ்வாய்க்கிழமை (27) அதிகாலை நுவரெலியா - பதுளை பிரதான வீதியின் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர், முறிந்து விழுந்த மரங்களை பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து வெட்டி அகற்றிய பின்னர் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாக மட்டுப்படுத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் பிரதான வீதிகள் மற்றும் சிறிய வீதிகளில் வாகனம் செலுத்தும் போது எச்சரிக்கையுடன் வாகனங்களை ஓட்டுமாறு பொலிஸார் சாரதிகளுக்கு வலியுறுத்துகின்றனர்.
க.கிஷாந்தன், பி.கேதீஸ்


10 minute ago
36 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
36 minute ago
2 hours ago
2 hours ago