Editorial / 2020 ஏப்ரல் 11 , பி.ப. 01:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
கே.சுந்தரலிங்கம்
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவிடம் தோட்ட உட்கட்டமைப்பு, சமுக வலுவூட்டல் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் விடுத்த வேண்டுகோளுக்கமைய, நுவரெலியா மாவட்டத்தில், தோட்டப் பகுதியில் வாழும் 14,000 பேருக்கு, நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக, நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர் கே.கே.ரவி தெரிவித்தார்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக பலர் தொழிலவாய்ப்புககளை இழந்துள்ளனர் என்றும் அவர்களுக்கு நிவாரணங்கள் பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டத்தை தற்போது ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதற்கமைய ஹட்டன், டிக்கோயா, தரவலை, பட்டல்கெலே, வனராஜா, பொகவந்தலாவை உள்ளிட்ட தோட்டங்களில் வாழும் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் வேலையிழந்து நிர்கதியான நிலையில் உள்ள முதியவர்கள், கொழும்பிலிருந்து தோட்டப்புறங்களுக்கு வந்த இளைஞர்கள் யுவதிகள், சமூரத்தி பயனாளிகள், நோயாளர்கள், மேசன், நாட்கூலி, சுயதொழிலில் ஈடுபட்டவர்கள் ஆகிய அனைவருக்கும் இந்த நிவாரணங்கள் பெற்றுக்கொடுக்க உள்ளதாகவும் தற்போது இந்த திட்டம் ஆரம்பித்த நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட எவ்வித வழியுமின்றி இருக்கும் அனைவருக்கும் இந்த நிவாரணம் பெற்றுக்கொடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்;.
30 minute ago
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
4 hours ago
8 hours ago