Kogilavani / 2021 மே 06 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.ஷங்கீதன், ஆர்.ரமேஸ்
கொரோனா தொற்று ஆரம்பமான 2020 மார்ச் முதல் 2021 மே மாதம் 5 ஆம் திகதிவரை, நுவரெலியா மாவட்டத்தில் 24,308 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் இவ்வற்றில் 2080 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாகவும் நுவரெலியா மாவட்டச் செயலாளர் நந்தன கலப்பட தெரிவித்தார்.
1,658 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் 422 தொற்றாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் 15 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
நுவரெலியா பிரதேசத்தில் 05 பேரும் அம்பகமுவ பிதேசத்தில் 04 பேரும், வலப்பனை பிரதேசத்தில் 03 பேரும், அங்குராங்கெத்தை பிரதேசத்தில் இரண்டு பேரும், கொத்மலை பிரதேசத்தில் ஒருவருமாக மொத்தம் 15 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்டத்தில் தற்போது அம்பகமுவ பிரதேசத்திலுள்ள இஞ்ஜஸ்டி, போடைஸ், பிலிங்க் போனி, பீரட், பாத்போட், போடைஸ், போடைஸ் நிசி டிவிசன், புளியாவத்தை நகரம், புளியாவத்தை மேற்பிரிவு, கீழ்பிரிவு ஆகிய பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன என்றும் ஹங்குராங்கெத்தையில் ரத்மெட்டிய கிராம சேவகர் பிரிவும் வலப்பனையில் நில்தண்டாஹின்ன கிராம சேவகர் பிரிவும் முடக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்டத்தில் தற்பொழுது வீடுகளில் தனிமைபடுத்தியுள்ள குடும்பங்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவுப் ஏப்ரல் 30ஆம் திகதி முதல் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இதனடிப்படையில் நுவரெலியா பிரதேசத்தில் 500 குடும்பங்களுக்கும் அம்பகமுவ பிரதேசத்தில் 350 குடும்பங்களுக்கும், ஹங்குராங்கெத்த பிரதேசத்தில் 350 குடும்பங்களுக்கும், வலப்பனை பிரதேசத்தில் 200 குடும்பங்களுக்கும், கொத்மலை பிரதேசத்தில் 100 குடும்பங்களுக்குமாக 1,500 குடும்பங்களுக்கு உணவுப் பொதிகள் வழங்கப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்தார்.
2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago