2026 ஜனவரி 21, புதன்கிழமை

நூரளை மாவட்டத்தில் 104 தொற்றாளர்கள்

Kogilavani   / 2021 மே 04 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

நுவரெலியா மாவட்டத்தில், நேற்று (3) மாத்திரம் 104 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று கொரோனா தடுப்பு செயற்பாட்டு மய்யம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக ஹட்டன் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 23 பேருக்கும் வலப்பனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 23 பேருக்கும், நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 23 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

மேலும், அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6 பேரும் பொகவந்தலாவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஐவரும், டிக்கோயா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஐவரும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். கினிகத்தேனை, கந்தப்பளை, நோர்வூட், லிந்துலை மற்றும் இராகலை ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த ஒக்டோபர் 24 ஆம் திகதி முதல் நேற்று வரை நுவரெலியா மாவட்டத்தில் ஆயிரத்து 684 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X