R.Maheshwary / 2021 ஒக்டோபர் 24 , மு.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
நெனோ நைட்ரஜன் பசளை சுற்றாடலுக்கு தீங்கு பயக்காது இருப்பினும், அது பற்றிய போதிய விளக்கம், வழிகாட்டல்கள் என்பன விவசாயிகளுக்கு வழங்காது விட்டால் எதிர்பார்க்கும் பொருளாதார நன்மைகளை அடைய முடியாதுபோகலாம் என இலங்கை விவசாய சேவையின் விவசாயப்பட்டதாரிகள் சங்கம் தெரிவித்தது.
கண்டி, கெண்டியன் ஆர்ட் ஹோட்டலில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.
மேற்படி அமைப்பின் தலைவர் எம்.சீ. ஜயசிங்க இது பற்றி மேலும் தெரிவித்ததாவது,
அரசினால் மேற்கொள்ளும் 'பசுமை விவசாயம்' மற்றும் 'சுபீட்சத்தின் நோக்கம்' வேலைத்திட்டம் போன்ற வற்றிற்கு விவசாய அறிஞர்கள் என்ற வகையில் எமது பூரண ஒத்துழைப்பு எப்போதும் உண்டு.
ஆனால் விவசாயம் தொடர்பான ஜனாதிபதி விசேட செயலணில் உள்ள, விவசாயம் பற்றிய போதிய விளக்கம் இல்லாத சில தனியார் இறக்கமதியாளர்களின் தவறான வழிகாட்டலால், நாடு பாதிக்காது தடுப்பது எமது பொறுப்பு என்ற வகையில் எமது கருத்துக்களை முன்வைக்க உள்ளோம்.
நெனோ தொழில் நுட்பம் என்பது இலங்கைக்கு புதிதல்ல. ஆனால் இறக்குமதி செய்யப்பட்டுள்ள நெனோ நைட்ரஜன் பற்றிய கள ஆய்வுகள் பற்றிய தௌிவுகள் இல்லை. அதே நேரம் தொகை ஏற்றுமதி செய்கின்ற கம்பனிகளின் வழிகாட்டல் மட்டுமே உள்ளன. எனவே எடுத்த எடுப்பில் இதனைப் பயன் படுத்தாது, ஆய்வுகளுக்கு மத்தியில் பயன்படுத்துவதே, மிகச் சிறந்தது அவர் தெரிவித்தார்.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago