Kogilavani / 2021 மே 11 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
துவாரக்ஷான்
நோர்வூட் பிரதேசசபை நிர்வாக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், 48 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில், வாரத்துக்கு இரண்டுமுறை தொற்று நீக்கும் பணியை முன்னெடுக்கவுள்ளதாக, சபையின் தவிசாளர் ரவி குழந்தைவேல் தெரிவித்தார்.
இதுவரை பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட 105 தோட்டங்களுக்கு வாரத்துக்கு ஒரு தடவை தொற்று நீக்கி தெளிக்கப்பட்டு வந்தாகவும் எனினும் தற்போது தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், வாரத்துக்கு இரண்டு தடவைகள் தொற்று நீக்கும் பணியை முன்னெடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், தோட்டப் பகுதிகளில் தோட்ட வைத்திய உதவி அதிகாரிகள், மருத்துவ அதிகாரிகள், குடும்ப சேமநல உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்போடு, கொரோனா த் திட்டங்களை மேற்கொள்ளவும், ஒலிபெருக்கி ஊடாக பிரசாரங்களை மேற்கொள்ளவும் பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளவும் துரித நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தவிசாளர் ரவி குழந்தைவேல் மேலும் தெரிவித்தார்.
2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago