2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

நோர்வூட் – கிளங்கன் ஆதார வைத்தியசாலை அபிவிருத்திகள் பூரணப்படுத்தப்படும்

Gavitha   / 2021 பெப்ரவரி 25 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்டுள்ள நோர்வூட் - கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் பூரணப்படுத்தாமலிருந்த அபிவிருத்திப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வைத்தியசாலை நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கமைய, தோட்ட வீடமைப்பு அமைச்சு நிதி ஒதுக்கீட்டின் ஊடாக, இந்தக் குறைப்பாடுகள் பூரணப்படுத்தப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் வைத்தியசாலையில் வைத்தியர்களின் பரிசோதனை அறைகளுக்கான ஒதுக்கும் அபிவிருத்தி பணிகள் உள்ளிட்ட தரைகளுக்கான பளிங்கு கற்கள் பதிப்பு, ஜன்னல்கள் புனரமைப்பு என தடைப்பட்டிருந்த அபிவிருத்திகள் அனைத்தும் பூரணப்படுத்தப்பட்டு வருகின்றது.

பெருந்தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் குமாரவேல் தொண்டமானின் பணிபுரைக்கு அமைய பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் நேரடிப்பார்வையில் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .